×

அர்ப்பணிப்புடன் – முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு தேசிய விருது; மகிழ்கிறேன்!..: ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசிய திரைப்பட விருது பெறும் பார்த்திபன், விஜய் சேதுபதி, இமான், வெற்றி மாறன், தனுஷ்-க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 67-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் நேற்று அறிவித்தனர். விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு ஜூரி விருது அறிவித்துள்ளனர். சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷூக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவித்துள்ளனர். அதனையடுத்து விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இசையமைப்பாளர் டி. இமானுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை பாராட்டும் வகையில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்  பார்த்திபன், விஜய் சேதுபதி, இமான், வெற்றி மாறன், தனுஷ்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புடன் – முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன். மென்மேலும் சிறப்புகளைப் பெறுக என அவர் கூறியுள்ளார். …

The post அர்ப்பணிப்புடன் – முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு தேசிய விருது; மகிழ்கிறேன்!..: ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Stalin ,Chennai ,Parathiban ,Vijay Sethupathi ,Iman ,Win Martan ,Dhonush-to-Dazhagam ,MJ ,G.K. Stalin ,
× RELATED மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும்...